உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஐரோப்பிய அயல்நாடுகளுடன் சேர்ந்து கடன் எடுக்க விரும்பும் மக்ரோன்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
50 பார்வைகள்

ஐரோப்பாவின் எதிர்கால முதலீட்டு தேவைகளை நிறைவேற்ற 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இணைந்து “Eurobonds” எனப்படும் ஒருங்கிணைந்த கடன் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் மீண்டும் முன்மொழிந்துள்ளார்.எனினும், ஜெர்மனி மற்றும் சில வட ஐரோப்பிய நாடுகள் இத்திட்டத்திற்கு இதுவரை சாதகமான நிலைப்பாட்டைக் காட்டவில்லை. அவர்களின் கருத்துப்படி, ஐரோப்பிய பொருளாதாரத்தின் பிரதான சவால் அதிகப்படியான கடன் அல்ல; மாறாக உற்பத்தித்திறன் குறைவு மற்றும் போட்டித்திறன் பற்றாக்குறையே முக்கிய பிரச்சினையாகும். ஆகவே, நிதி ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடான பட்ஜெட் நடைமுறைகள் முன்னுரிமை பெற வேண்டும் என அவை வலியுறுத்துகின்றன.

Eurobonds குறித்த விவாதம் புதியதல்ல. 2012ஆம் ஆண்டு யூரோ மண்டல கடன் நெருக்கடியின்போது, அந்நாள் ஜெர்மன் அதிபர் அங்கெலா மெர்கல் “நான் உயிருடன் இருக்கும் வரை Eurobonds அமல்படுத்தப்படாது” எனத் தெளிவாக அறிவித்திருந்தார்.2000களில் Hartz சீர்திருத்தங்களின் மூலம் ஜெர்மனி தனது பொருளாதாரத்தை வலுப்படுத்திய பின்னணியில், பிற நாடுகளும் அதேபோன்று பொறுப்பான நிதி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு வட ஐரோப்பிய நாடுகளில் வலுவடைந்தது.ஆனால் 2020ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் ஐரோப்பிய பொருளாதாரத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

மக்ரோன் – மெர்கல் இணைந்த முன்மொழிவின் அடிப்படையில், 750 பில்லியன் யூரோ மதிப்பிலான “NextGenerationEU” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியம் வரலாற்றில் முதல் முறையாக பெருமளவில் ஒருங்கிணைந்த கடனை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் போரும் எரிசக்தி நெருக்கடியும் உருவானதால், ஜெர்மனியையே பாதுகாப்பு மற்றும் பொருளாதார துறைகளில் அதிக கடன் பெறும் நிலைக்கு தள்ளியது.இந்நிலையில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் போன்ற தென் ஐரோப்பிய நாடுகள் கடந்த ஆண்டுகளில் முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியையும் பட்ஜெட் நிலைத்தன்மையையும் அடைந்துள்ளன. இதனால் “வட நாடுகள் ஒழுங்கானவை, தென் நாடுகள் செலவாளிகள்” என்ற பழைய கருத்து மங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


பிரான்ஸ் தற்போது 1.2 டிரில்லியன் யூரோ அளவிலான ஒருங்கிணைந்த கடன் திட்டத்தை ஆதரிக்கின்ற நிலையில், சில வட மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பொதுச் செலவினத்தை அதிகரிப்பதை விட தனியார் முதலீடுகள் மற்றும் சந்தை சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதே சரியான வழி என வலியுறுத்துகின்றன.இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால நிதிக் கொள்கை தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், பட்ஜெட் விவகாரத்தில் பிரான்ஸ் தனிமைப்படும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0