உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

குடும்பஸ்தர் மீது அதிகாலையில் வாள்வெட்டுத் தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டின் புகைக்கூட்டு வழியாக நேற்று அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும், வீட்டில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மட்டுமே தனிமையில் இருந்துள்ள நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கெங்காதரன் என்ற நபர் மீதே இவ்வாறு சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கத்தி கூச்சல் இட்ட போதும் அக்கம் பக்கத்தினர் எவரும் உதவிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் தாக்குதல் நடத்தியவர்கள் முகமூடி அணிந்திருந்த நிலையில் அவர்களது முகத்தை அடையாளம் காண முற்பட்ட வேளை அவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து எந்தவிதமான தகவலும் தெரியாத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிஸார் மதிய நேரமே சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பொலிஸாரும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர தினத்திலும் சுதந்திர இல்லாமல் இருக்கும் நிலையில் தான் எம் தமிழ் இனம் இருக்கின்றது.

ஆனால் நாட்டில் பாரியவில் போதைப்பொருள் கடத்தல், கொலை கொள்ளை, சட்டவிரோத பணப் பரிமாற்றம், பாலியல் குற்றங்கள், சட்டவிரோத மதுமானம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் சுதந்திரமான முறையிலேயே அனைத்து குற்றங்களையும் செய்கின்றனர்.

இத்தகைய குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்க பணத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கின்ற பொலிஸ் அதிகாரிகளே காரணமாக இருக்கிறார்கள்.

எனவே உரிய அதிகாரிகள் உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கிறோம்.

குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

77 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

70 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

31 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

63 0 0