உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
56 பார்வைகள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கேவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடாத்தி வருகின்றது. இதில் நகர பகுதிக்கு கல்வி கற்கின்ற மாணவர்கள், அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும்.

ஆனால் இன்றைய தினம் குறித்த பேருந்தானது வளமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு தனியார் பேருந்திற்கு போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் கல்வி பொது தராதரா உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப் பட்டமை, பருத்தித்துறை கொழும்பு, பருத்தித்துறை வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்றைய தினம் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் போக்குவரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.

குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகமையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

59 0 0