கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இலங்கையர் மலோசியாவிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர், சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு கிலோ 010 கிராம் குஷ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.