உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அடக்குமுறைகள் தொடர்ந்தால் மக்கள் மீண்டும் கிளர்ந்தெழுவார்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

“அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள். ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரச தரப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையைக் கோரி இருந்தது. அதன் பிரகாரம் அவர்களின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கி இருக்கின்றார்கள். ஆனால் அரசு, மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகின்றது.

இதனால் அரசு தொடர்பில் மக்களுக்கு இருந்து வந்த நல்லெண்ணம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதனால் அரசு அந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை விசாரணைக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கின்றது.

ஊழல், மோசடியுடன் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை. ஆனால் மக்கள் இதற்கு மாத்திரம் அரசுக்கு ஆணை வழங்கவில்லை. மக்கள் ஆணை வழங்கிய அனைத்து விடயங்களும் இன்று மறுபக்கத்துக்குத் திரும்பியுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக இந்த அரச தரப்பினர் தெரிவித்தார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவதாகத் தெரிவித்தார்கள். இவை எதுவும் இடம்பெறவில்லை. அதேபோன்று அரசின் சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நியமனங்கள் எதுவும் அவர்கள் தெரிவித்தது போல் செயற்படவில்லை.

அதனால் அரசின் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே தற்போது, ஒருசிலரை குற்றப் புலனாய்வுக்கு அழைத்து வருகின்றார்கள்.

இந்த அரசில் தற்போது அடக்குமுறை மாத்திரமே எஞ்சி இருக்கின்றது. அரசு ஒன்று அடக்குமுறையை மேற்கொள்ளத் தீர்மானிப்பது என்பது அது அந்த அரசின் பலவீனமாகும். இந்த அரசும் தற்போது அதனையே கையில் எடுத்திருக்கின்றது.

அதேநேரம் இன்று நாடுபூராகவும் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. வைத்தியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கின்றது. அதனால் அரசு அவர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

77 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

70 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

31 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

63 0 0