உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஆசிரியர் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த மாணவன்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

பாணந்துறையிலுள்ள பிரபல தனியார் பாடசாலையில் ஆசிரியர் கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த மாணவர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செயலை பிலியந்தலை, கெஸ்பேவ, கோனா மடித்த வீதியைச் சேர்ந்த 14 வயதான மாணவனே செய்துள்ளார்.

நேற்று பாடசாலையில் மாணவர்களின் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இதன்போது கண்காட்சி குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தது.

குறித்த மாணவன் அந்த புத்தகத்தில் எழுதியிருந்த தகாத வார்த்தைகளை ஆசிரியர் ஒருவர் கவனித்துள்ளார்.

கடுமையான வார்த்தையை எழுதியதற்காக ஆசிரியர் அவரை எச்சரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த மாணவன் மூன்றாவது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்று, Live or Die என ஒரு புத்தகத்தில் எழுதி, “சேர், இதில் நான் என்ன செய்ய வேண்டும்?” என வினவியுள்ளார். Live என ஆசிரியர் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் மாணவன் திடீரென நாற்காலியில் இருந்து எழுந்து ஓடி 3வது மாடியில் இருந்து குதித்ததாக நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவனின் தாயாரும் பல ஆண்டுகளாக அதே பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியை என குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நோயாளர் காவுவண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

அவரது தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

74 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

67 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

28 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

60 0 0