வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.!
இலங்கையின் 78வது சுதந்திரதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் எளிமையாக இடம்பெற்றது.
பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் பி.எ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மதகுருமார் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தமிழ் சிங்களம் என இரு மொழிகளிலும் தேசியகீதம் இசைக்கப்பட்டு சுதந்திரந்திர தினம் எளிமையாக இடம்பெற்றது.






