உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இளம் யுவதி துஷ் – பிரயோகம்; சட்டத்தரணிக்கு விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 24 வயதுடைய இளம் யுவதி ஒருவரை பாலியல் துஷ் பிரயோகம் செய்து மூன்று மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (03) உத்தரவிட்டார்.

மேலும், குறித்த வழக்கின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காததாக கூறப்படும் பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

குறித்த பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பிரதேசத்தில் வசித்து, மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் சட்டத்தரணியாக கடமையாற்றி வரும் ஒருவர், தனது பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் பணியாற்றிய வந்த அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பலாத்காரமாக கற்பழித்து மூன்று மாத கர்ப்பிணியாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 30ஆம் திகதி குறித்த சட்டத்தரணி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சட்டத்தரணி மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்காக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தலைமையில் சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

வழக்காளி சார்பில் சட்டத்தரணி றிஸ்வி தலைமையிலான சட்டத்தரணிகளான யோகேஸ்வரன், உவைஸ், ரூபி, உதயாகரன், சுதர்சன், கமலதாசன், நஜீபா, ரம்சீயா, தவராசா மற்றும் சசிதரன் ஆகியோர் ஆஜராகி தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் மற்றும் சேவை நாடும் மகளீர் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாக பொலிஸார் நீதவானிடம் தெரிவித்தனர். இதன் காரணமாக விசாரணைகள் முழுமையடையவில்லை என பொலிஸார் அறிவித்தனர்.

இதனையடுத்து, குறித்த சட்டத்தரணியை எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகளை கைது செய்யவும், உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் கட்டளை பிறப்பித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

72 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

65 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

27 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

60 0 0