உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

எமது உறவுகள் அழுதுகொண்டிருக்கும் போது நாங்கள் எவ்வாறு பன்னீர் தெளித்து சுதந்திரத்தை கொண்டாட முடியும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கோரிக்கை விடுத்தார்.

நாளைய தினம் முன்னெடுக்கப்படும் கரிநாள் போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாளைய தினம் 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சி என்பன 76 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றன.

இக்காலத்தில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்திருக்கின்றார்களா? சுதந்திரமாக செயற்பாடுகளின் ஈடுபட்டிருக்கின்றார்களா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. குடியுரிமைச்சட்டம், வாக்குரிமைச்சட்டம் என்பன கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்ற மக்களாக மாற்றி விட்டார்கள். அந்த அடிப்படையில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் ஆரம்பித்தது.

அந்த வகையில் இலங்கையின் சுதந்திர தினம் என்பது எங்களைப் பொறுத்தவரையில் திண்டாட்ட தினமாகவே இருந்து வந்திருக்கின்றது. தென்னிலங்கையில் தான் அது கொண்டாட்ட தினமாக இருக்கின்றது. கடந்த காலங்களிலும் இதனை நாங்கள் திண்டாட்ட தினமானவே அனுஷ்டித்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் நாளைய தினத்தையும் கொண்டாட முடியாத திண்டாட்ட தினமாக ஒரு கரிநாளாகவே அனுஷ்டிக்க இருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் வந்து ஒரு வருட காலம் தான் ஆகின்றது. நீங்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கின்றீர்களா என்று கேட்கின்றார்கள். ஆனால் புதிய அரசாங்கம் வந்த உடனடியாக தேசிய இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. குறைந்த பட்சம் தேசிய இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முன்நடவடிக்கைகளையாவது அவர்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தான் சொல்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வீதிகளில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான நீதிகள் கிடைப்பதற்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. சிலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் பலர் இன்றும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தோல்களில் பல நட்சத்திரங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

கைப்பற்றப்பட்ட நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. எமது மாவீரர்களின் துயிலுமில்லங்களில் சப்பாத்துக் கால்களுடன் இராணுவத்தினர் கொண்டாட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். எமது சகோதரர்கள் மறைந்த பிற்பாடும் கூட அவர்களது மயானங்களில் இராணுவ சப்பாத்துக் கால்கள் மிதித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன. அரசியற் கைதிகளில் விடுதலை இல்லாமல் இருக்கின்றது. இந்த அரசாங்கத்தில் மக்கள் ஒரு எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். தற்போது கிவுல் ஓயா திட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் வாக்குறுதி மீறப்பட்டிருக்கின்றது. எந்தவொரு மாவட்டத்தினதும் குடிப்பரம்பல் மாற்றுகின்ற வகையில் குடியேற்றத் திட்டங்கள் இடம்பெறாது என்ற வாக்குறுதியை அவர் வழங்கியிருந்தார். ஆனால் இந்த கிவுல் ஓயாத் திட்டம் தமிழ் மக்களின் குடிம்பரம்பலைக் குறைப்பதற்கான திட்டமாகவும், பெரும்பான்மையினருக்கு ஒரு சாதகமான திட்டமாகவும் இருக்கின்றது.

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்திருக்கின்றார்கள். அது சட்டவிரோதம் என்று தெரிந்தும் அதனை அகற்ற முடியாது என்கிறார்கள். அதேபோன்று தான் தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

சட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற கோவில்கள், தேவாலயங்கள் இடிக்கப்படுகின்ற போது ஏன் சட்டவிரோதமாக அமைக்கப்படுகின்ற விகாரைகள் மாத்திரம் அப்படியே இருக்கின்றன?

எமது மக்கள் எதுவித பயனுமின்றி தெருவில் நிற்கும் போது சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாங்கள் மக்களின் கருத்துகளை மதிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்கின்றோம். மக்கள் விரும்புகின்ற சுதந்திரம் இல்லாத நிலையில் இந்த சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும்.

எமது உறவுகள் கண்ணீரும் கம்பளையுமாக அழுதுகொண்டிருக்கும் போது நாங்கள் எவ்வாறு பன்னீர் தெளித்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியும். தமிழ் பேசும் மக்களாகிய எமக்கு இந்த சுதந்திர தினம் என்பது சுதந்திரத்தைத் தந்த தினம் அல்ல. தற்போதும் நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றோம். சிங்கள் மொழி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது. பௌத்தம் அரச மதமாக இருக்கின்றது. இது அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தமாகவே பார்க்கின்றோம். அடுத்த சுதந்திர தினத்தைத் தமிழ் மக்கள் கொண்டாடுவதாக இருந்தால் தேசிய இனப்பிரச்சினை விடயம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம், தமிழ் மக்கள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்ற அனைத்துக்கும் தீர்வைத் தந்தால் நாங்களும் உங்களைப் போன்று இந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்.

அடுத்த வருடமாவது எமது இனப்பிரச்சினை தொடர்பிலான தீர்வினை முன்நிறுத்தி சுதந்திர தினம் கரிநாள் அல்ல தமிழ் மக்களும் கொண்டாடும் ஒரு தினமாக மாற்ற வேண்டும்.

எனவே எமது கட்சியின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதித் தலைவர்கள், பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் அனைவரும் நாளைய சுதந்திர தினத்தைக் கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீருடன் எமக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள். எனவே அந்த கரிநாள் நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பதில் பொதுச்செயலாளர் ஒரு கருத்தினை தெரிவித்திருந்தார்,
அவரை நீக்குவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கவில்லையென தலைவர் தெரிவித்திருந்தார். செயலாளர் அவரை நீக்கமுடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

நாங்கள் எப்போதும் நேர்மறையான கருத்தினை ஏற்றுக்கொள்பவர்கள். எங்களின் ஆதரவாளர்கள், அபிமானிகள் எங்களிடம் பல்வேறுவிதமான கேள்விகளை கேட்டு குடைந்துகொண்டிருக்கின்றார்கள். இன்றைய காலகட்டத்தில் கட்சிக்குள் ஏற்படுகின்ற சிறுசிறு முரண்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியில் பதவி நீக்கம் செய்வது அகற்றுவது என்பது கட்சிக்கு பாதிப்பனை ஏற்படுத்தும் செயற்பாடாக இருக்கின்றது.

தலைவரின் கருத்தினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அவரை நீக்குவதான தீர்மானத்தினை இன்னும் எடுக்கவில்லையென்று கூறியிருக்கின்றார். பலவந்தமாக நிர்ப்பந்தமாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது கட்சியின் வளர்ச்சியை தூண்டும் என்று சொல்வதை விட கட்சியினை பின்னிலையடையச் செய்யும் என்பதே எனது முடிவு. தலைவர் கூறிய கருத்திற்கு அமையவே நாங்கள் மக்களுக்கு கூறிவருகின்றோம் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

26 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

56 0 0