உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மின்சார மோசடியில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து நஷ்டஈடு அறவீடு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
18 பார்வைகள்

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் (விசாரணை) இந்திக பெர்னாண்டோ கூறுகையில்,
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார்.

மோசடியான மின்சாரப் பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 011-2422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

1 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

25 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

56 0 0