உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவினால் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு சந்தேகத்திற்கிடமான இரண்டு வங்கிக் கணக்குகள் தொடர்பாக, கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பணம், கணக்கு வைத்திருப்பவரின் ஹன்வெல்ல பகுதியில் உள்ள இரண்டு வங்கிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு பணம் எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய, கணக்குகளைப் பராமரித்த சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை (3) கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

64 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

26 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

59 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

56 0 0