பண்டார ரம்புக்வெல்ல கைது.!
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (3) கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டார ரம்புக்வெல்ல அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணச்சலவை குற்றச்சாட்டின் கீழேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.