போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற இருவர் கைது.!
பாரவூர்தியில் போதை மாத்திரைகளை கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் வத்தளை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 33 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தியை சோதனைக்குட்படுத்தியபோது, குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 12 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 789,500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.