உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தேர்தல் கால பொய்கள் இன்று நிஜமாகின்றன.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் கூறியது பொய் என்பதை நாட்டு மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.”

இவ்வாறு முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அவர் நேற்று விசாரணைக்கு வந்திருந்தார்.

விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கெஹெல்பத்தர பத்மே (பாதாளக் குழு உறுப்பினர்) என்பவர் எமது ஊரைச் சேர்ந்தவர்.

அரசியல் ரீதியில் அவர் எம்முடன் இணைந்து செயற்பட்டாரா என்பது பற்றி விசாரிக்கவே சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.

கெஹெல்பத்தர பத்மேவுடன் எனக்குத் தொடர்பு இல்லை. அவருடைய தந்தையுடன் எமக்குத் தொடர்பு இருக்கின்றது.

தமது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே இந்த அரசு எம்மை விசாரணைக்கு அழைக்கின்றது.

இந்த அரசு கூறியது பொய் என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இதனால் அரசு மீது அதிருப்தி உருவாகியுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

67 0 0