உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழ். அரியாலை கிழக்கில் ஈரநில பிரதேசத்தில் உலக ஈர நில தினம் அனுஷ்டிப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் இன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில், யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் இன்று காலை 9.00 மணிக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.


யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. லோ.கி ஆனந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார். மாவட்ட அரசாங்க அதிபர் உரையில், உலக ஈரநில தினத்தின் தேசிய விழா இன்று பத்தரமுல்லை ‘அபே கம’ வளாகத்தில் பிரதமர் கெளரவ ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறுகின்றது என்றும், இதற்கு இணையாக யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இங்கு நடைபெறுகின்றது என்றும் தெரிவித்தார்.


அவர், ஈர நிலங்கள் நீர் வளங்களை பாதுகாப்பதிலும், வெள்ள கட்டுப்பாட்டிலும், உயிரியல் பல்துறை பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதையும், இவற்றை பாதுகாத்து இயற்கைச் சமநிலையை பேணுவதை அவசியமாகக் கூறினார். மேலும், “ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு – கலாசார பாரம்பரியத்தை கௌரவித்தல்” என்ற தொனிப்பொருளில் இந்நாள் உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிகழ்வு விழிப்புணர்வு நடைபவனியுடன் தொடங்கியது; நிகழ்வு பகுதியில் கண்டல் தாவர மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டு, ஈர நில தினம் தொடர்பான வழிகாட்டல் கையேடுகள் வழங்கப்பட்டன.


நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுற்றாடல் பிரிவு பொலிஸார், யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், பாடசாலை சுற்றாடல் கழக முன்னோடி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

57 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

54 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

67 0 0