உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று (01.02.2026) ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் சி.சு.யோதிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், வைத்திய கலாநிதி இ.சிவசங்கர், கணக்காளர் வ. தில்லைநாதன் ஆகியோர் முத்துக்குமாரசாமி தொடர்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்து வாலிபர் சங்கத்தின் செயலாளர் யோ.சஜீதராவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நினைவுகூர் அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியப் செயற்பாட்டாளர்கள், அமரர் முத்துக்குமாரசாமியின் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் சி.சு.யோதிலிங்கம் எழுதிய தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தா த. முத்துக்குமாரசாமி’ என்ற கையேடும் வெளியிடப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

56 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

53 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0