உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தங்க விலையில் வீழ்ச்சி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,889 அமெரிக்க டொலராக காணப்பட்டது. எனினும் இன்றைய (2) தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4687 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை தொடர்ந்தும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு பவுன் தங்கத்தின் விலை 12,000 ரூபாய் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கம் ரூ. 338,600 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம், ’24 கரட்’ ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 368,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இது கடந்த வெள்ளிக்கிழமை 380,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

55 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0