உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பீடி இலைகளுடன் சந்தேகநபர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

நீர்கொழும்பு – தெல்வத்த சந்திப் பகுதியில், சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 668 கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட 18 பைகள் மற்றும் கெப்ரக வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

54 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

50 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0