உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

களுத்துறை, அகலவத்தை, திரிவணகெட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கண்டெடுக்கப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் திரிவணகெட்டிய தோட்டத்தை சேர்ந்த பி. லெச்சமி (74) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவைக்கு பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, அங்கு சென்றபோது, ​​குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக சந்தேகித்து, பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட உடலுக்கு அருகில் எரிவாயு சிலிண்டர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

54 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

51 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0