உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

புதிய கணக்காய்வாளர் நாயகம்; நாளை மறுதினம் இறுதி முடிவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
40 பார்வைகள்

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாளை மறுதினம் அரசமைப்புப் பேரவை கூடவுள்ளது என்றும் அவர் கூறினார்.

புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பப்பட்ட பெயர்களை அரசமைப்புப் பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

கணக்காய்வாளர் நாயகமாகப் பதவி வகித்த டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன 2025 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இதுவரையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் தெரிவுசெய்யப்படவில்லை.

பதில் கணக்காய்வாளர் நாயகமாகச் செயற்பட்டவரின் பதவிக் காலமும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை பிரேரிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசமைப்புப் பேரவை நாளைமறுதினம் கூடுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

96 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

64 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

58 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

59 0 0