உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் வீதி கடமையில் ஈடுபடும்பொலிஸாரின் முறைகேடுகள்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

வீதி கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமகனால் குற்றச்சாட்டப்பட்டது. அந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்றையதினம் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது.இதன்போது குறித்த விடயம் பேசப்பட்டது.குறித்த பொதுமகன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இரவு கடமையில் ஈடுபடும் பொலிஸார் சாரதிகளின் கண்களில் வெளிச்சத்தை பாய்ச்சி வாகனங்களை மறிக்கின்றனர். அத்துடன் பொலிஸார் தமது வாகனங்களின் நிறுத்தல் விளக்குகளை ஒளிரவிடாமல் இருட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஆகவே இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.இதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர்,

குறித்த விடயத்தை நானும் அவதானித்துள்ளேன். இதனை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

94 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

64 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

58 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0