உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: கந்தளாயில் போராட்டத்தில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் மனைவிகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

சிவில் பாதுகாப்புப் படை (ஊர்காவல் படை) வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, அவர்களின் மனைவியர் பதாதைகளை ஏந்தி இன்று (31) கந்தளாயில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.கடந்த மாதம் கந்தளாயில் கடமையாற்றிய சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் பலர் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தீர்மானத்தினால் தமது குடும்ப வாழ்வாதாரமும், பிள்ளைகளின் கல்வியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து 80-க்கும் மேற்பட்ட மனைவியர் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவிக்கையில்

“ஊர்காவல் படை” என்பது அந்தந்த ஊர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. அதனை விடுத்து, வீரர்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது படையின் நோக்கத்திற்கே முரணானது.போர் காலங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் தத்தமது ஊர்களுக்காகப் பாடுபட்டவர்களை இப்போது தூர இடங்களுக்கு மாற்றுவது நீதியற்றது.

வெளி மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை உடனடியாக ரத்து செய்து, வீரர்களை மீண்டும் திருகோணமலை மாவட்டத்திற்குள்ளேயே பணியமர்த்த வேண்டும்.கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை ஆரம்பித்த பெண்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று 87ஆம் கட்டை சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாட்டை முன் வைத்தனர் .இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் கந்தளாய் பொலிஸார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0