உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யுனெஸ்கோ, ஹுவாவே நிறுவனங்களின் பங்களிப்புடன் பாடசாலைகளுக்கு டிஜிட்டல் சாதனங்கள் – பிரதமர் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வெளிநாட்டு கல்வி உதவிகளை மாணவர்களின் நலனுக்காக மிகுந்த வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கு, கல்வி அமைச்சும் டிஜிட்டல் மயமாக்கல் செயலணியும் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நவீன டிஜிட்டல் உபகரணங்களைக் கையாளுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் தேவையான மனிதவளத்தைப் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். ஹுவாவே நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ கிராமப்புற கல்விக்கான சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சமமான பகிர்ந்தளிப்பு: வெளிநாட்டு உதவிகளாகக் கிடைக்கப்பெறும் டிஜிட்டல் உபகரணங்களை, முறையான வழிமுறையூடாக அனைத்துப் பாடசாலைகளுக்கும் சமமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.நவீன டிஜிட்டல் உபகரணங்களை முறையாகக் கையாளுவதற்கான திறன், தற்போது ஆசிரியர் பயிற்சிகள் ஊடாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயன்பாடு உபகரணங்களை வினைத்திறனாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்துவதற்கான மனிதவளம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

மாணவர்களின் வயது மற்றும் தரங்களுக்கு ஏற்ப, டிஜிட்டல் உபகரணப் பயன்பாட்டின் எல்லையை நிர்ணயிக்கும் சிறுவர் பாதுகாப்பு முறையினூடாகப் பிள்ளைகளுக்கு டிஜிட்டல் கல்வி பெற்றுக்கொடுக்கப்படும்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026.01.27 அன்று ‘இசுருபாய’ கல்வி அமைச்சில் ஹுவாவே நிறுவனம் மற்றும் யுனெஸ்கோ கிராமப்புற கல்விக்கான சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் ஷாவ் ஷூயி ( Zhao Shouyi), இலங்கையின் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காகக் கவனம் செலுத்தப்பட்டுள்ள பிரதான துறைகள் குறித்து பிரதமருக்கு விளக்கமளித்தார்.

ஹுவாவே மற்றும் யுனெஸ்கோ நிறுவனங்கள் இணைந்து கல்வி அமைச்சின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுடன் ஒன்றிணைந்து, இலங்கையின் கிராமப்புறக் கல்வியை மேம்படுத்துவதற்காகத் தேவையான ‘ஊடாடும் திரைகள் உள்ளிட்ட ஸ்மார்ட் வகுப்பறை டிஜிட்டல் சாதனங்களை வழங்கவுள்ளன. அத்துடன், ஆசிரியர்களுக்கு நவீன டிஜிட்டல் கற்பித்தல் முறைகள் குறித்த விசேட பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கும் சீனத் தரப்பு தயாராக இருப்பதாக பேராசிரியர் ஷாவ் ஷூயி விளக்கியுள்ளார்.

கல்விச் சீர்திருத்தங்கள் ஊடாக டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச்செல்வதில் பிரதமர் காட்டும் தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் அவர் இதன்போது பாராட்டினார். சீன அரசாங்கத்தினால் இந்த வேலைத்திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் தேசிய கல்வி டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டங்கள் ஊடாக, இலங்கையின் கல்வித்துறைக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்புக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, யுனெஸ்கோ சர்வதேச மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஷாவ் ஷூயி, திருமதி லியு தியான்யி, ஹுவாவே டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சமூக விவகார தொடர்பாடல் பணிப்பாளர் ராவ் யுவான்ஜுன், மூலோபாய பணிப்பாளர் இந்திக டி சொய்சா, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சாவித்திரி பானபொக்க, உதவிப் பணிப்பாளர் இசுரி விதாரண, யுனெஸ்கோ இலங்கைக்கான தேசிய அலுவலகத்தின் செயலாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க உள்ளிட்ட பிரதமர் அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0