உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சித்தாண்டி சமூக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மட்டக்களப்பு சித்தாண்டி சமூக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற பொங்கல் விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய தினம் 31.01.2026 சனிக்கிழமை சித்தாண்டி சமூக ஒன்றியத் தலைவர் திரு.ந.சதீஸ்கண்ணா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது முதலில் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்று ஆலயத்தில் இருந்து சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் வரை அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு கலை கலாசார நிகழ்வு சகிதம் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், அதிதிகள் பொங்கலுக்கான அரிசி இடல் இடம்பெற்று, வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமையுரை, கலை கலாசார நிகழ்வுகள், சாதனையாளர் கௌரவிப்பு, அதிதிகள் உரை, நன்றியுரை, தமிழ் மொழி வாழ்த்து பாடப்பட்டு நிகழ்வு நிறைவுபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், இரா.சாணக்கியன், ஏறாவூர்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான சி.வவானந்தன், த.பிரபாகரன், திரு.நாகேந்திரன், திரு.பிரினட்குணபாலன், அரச உயரதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சித்தாண்டி சமூக ஒன்றிய உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0