உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையில் பல முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.மேலும், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கள உத்தியோகத்தர்கள்,அம்பியூலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி, அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகளும் இந்த வர்த்தமானியின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், நீர்ப்பாசனம், தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், ஊடகச் சேவைகள், தாழ்நிலங்களை நிரப்புதல், விவசாயம் மற்றும் விவசாயக் காப்புறுதி தொடர்பான சேவைகளும் அத்தியாவசியமானவை என மீள அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0