உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வவுணதீவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு! நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15 பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் இதில் 13 பேர் உயிரிழந்ததற்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்று(30.1.2026) மாலை நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வருடம் 20 வயதுக்குட்பட்ட நான்கு பேர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள நிலையில் அதில் மூன்று பேரின் மரணத்திற்கு இந்த கசிப்பு தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.கசிப்பு காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் ஒவ்வொரு கிராமமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே பகுதியில் இன்னும் மூன்று பிள்ளைகள் கசிப்புக்கு அடிமையான நிலையில் உள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.பொலிஸாரும் சமூக கட்டமைப்பினரும் இணைந்து கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

91 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0