உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க நல்லிணக்கம் அவசியம் – அமைச்சர் சந்தன அபேரத்ன கருத்து.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் முழு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்ற நிலையில், உள்ளூராட்சி அமைச்சர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போது, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:

“உண்மையான சுதந்திரத்தைக் கட்டியெழுப்ப நிலையான சமாதானம் அவசியம். இதற்காக இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. நாட்டில் மீண்டும் இனவாத மோதல்கள் இடம்பெற இடமளிக்கமாட்டோம். தேசிய சமத்துவம் கட்டியெழுப்பப்படும். உண்மையான சுதந்திரம் நிலைநிறுத்தப்படும். சிறந்த நாடையும் வளமான பொருளாதாரத்தையும் உருவாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.”

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

91 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0