உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

60 சதவீத சாரதிகள் போதைக்கு அடிமை – அமைச்சர் பிமல் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கண்டியில் நடைபெற்ற விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெரும்பாலான விபத்துக்கள் சாரதிகளின் கவனக்குறைவால் நடந்துள்ளதோடு, இவர்களில் பெரும்பாலானோர் மது அல்லது போதைப்பாருள் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டது. இனிமேல் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாது. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.அந்த அனுமதிப்பத்திரம் இருந்தால் மட்டுமே பேருந்துகளை செலுத்த முடியும்.

மேலும் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீள விரும்பும் சாரதிகளுக்கு அரசாங்கத்தினால் உரிய சிகிச்சை வழங்கப்படும்.அதேவேளை சட்டத்துக்கு எதிராக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

85 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0