உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலை அமைக்க ஏற்பாடு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நாட்டில் தேசிய திரைப்படப் பாடசாலையொன்றை நிறுவுவது தொடர்பில் கலை மற்றும் கலாசார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற மன்றம் கவனம் செலுத்தியுள்ளது.கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் தொடர்பான நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்விவகாரம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன கலந்து கொண்டதுடன், தேசிய திரைப்படப் பாடசாலை திரைப்படம் குறித்த கோட்பாட்டு அறிவை வழங்குவதுடன், நடைமுறை ரீதியாக திரைப்படங்களை உருவாக்கக் கூடிய திறமையான கலைஞர்களை உருவாக்கும் பாடநெறிகளை கொண்ட நிறுவனமாக அமைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.


மேலும், சர்வதேச திரைப்படப் பாடசாலைகளின் தரநிலைகளுக்கு இணங்க இத்தகைய பாடசாலை பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது தொடர்பில் நீண்டகாலமாகக் கலந்துரையாடப்பட்டு வந்த போதிலும், இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும் இங்கு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0