உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

துணுக்காய்- தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம், துணுக்காய் பிரதேச செயலகம் மற்றும் இளம்புயல் விழையாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து நடத்திய பொங்கல் விழா, 29.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம் பொது விழையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.


விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரும் ஊடகவியலாளருமான ச. தவசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.பொங்கல் நிகழ்வுடன் ஆரம்பமான இவ்விழாவில் சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் முதியவர்களுக்கென பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

அதன்படி கிறிஸ் மரம் ஏறுதல், கிளித்தட்டு, கயிறிழுத்தல், தலையணைச் சண்டை, பலூன் ஊதி உடைத்தல், முட்டி உடைத்தல், தேங்காய் திருவுதல், கிடுகு பின்னுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட 42 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் செ. நவரத்தினராசா, தென்னியன்குளம் கிராம அலுவலர் செல்வி ந. கஜனி, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், கமக்கார அமைப்புத் தலைவர், நன்னீர் மீன்பிடிச் சங்கத் தலைவர், விழையாட்டுக் கழகத் தலைவர், துணுக்காய் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0