உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அவசர எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

மோல்டோவா நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான மனித வர்த்தகம் குறித்த தகவல்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிக்கையிடப்பட்டுள்ளன.

சமூக ஊடகக் கணக்கின் ஊடாக காணொளிகளை வெளியிட்டு இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவரிடம் பணத்தைக் கொடுத்து இந்த மோசடியில் சிக்கிய நபர்களிடமிருந்து தற்போது பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைப்பெற்று வருகின்றன.

அதற்கமைய, அவருக்கு எதிராக தற்போது பணியகத்தினால் அவசியமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த மோசடியில் சிக்கியவர்கள் இருப்பின் கூடிய விரைவில் பணியகத்திடம் முறைப்பாடு செய்யுமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின்படி, இலங்கைக்கு வெளியே வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களைச் சேர்த்தல், பிரச்சாரம் செய்தல், பணம் சேகரித்தல், தகவல்களைச் சேகரித்தல், கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும் என்பதுடன், அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பணியகம் குறிப்பிடுகின்றது.

இவ்வாறான மனித வர்த்தகர்களை அடக்குவதற்காக அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் விசேட பொலிஸ் பிரிவொன்றும் பணியகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், அப்பிரிவிற்கு இவ்வாறான முறைப்பாடுகள் பெருமளவில் கிடைத்துள்ளன.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தமது தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் அல்லது புதிய சமூக ஊடகப் பக்கங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்யும் போக்கொன்று தற்போது உருவாகியுள்ளதாகவும் பணியகம் அவதானித்துள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்காக, பணியகத்தின் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களிடம் தவிர வேறு இடைத்தரகர்களிடம் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு பணியகம் வேலை தேடுபோவரிடம் மேலும் கோரிக்கை விடுக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

83 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

62 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0