உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாவலப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வடிக்கும் தொழிற்சாலையொன்றை நடத்திய 4 பேர் நேற்று(29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 47 வயதான பிரதான சந்தேக நபர் உட்பட உதவி புரிந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள், நாவலப்பிட்டி மற்றும் யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காப்பகம் ஒன்றில், நீண்ட காலமாக இரகசியமாகவும், நுணுக்கமாகவும் இதனை நடத்தி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மேலதிக விசாரணைகளின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0