உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.

லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் டிசம்பர் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக இருந்ததால் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகன் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியதையடுத்து அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0