வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!
கம்பஹாவில் திஸாரிய, வாரண பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் யக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 60 வயதுடையவர் ஆவார்.
யக்கலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திஸாரிய, வாரண பிரதேசத்தில் உள்ள இடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து பல்வேறு வகையான வெளிநாட்டு சிகரெட்டுகள் 126000 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.