தரம் 1 மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு.!
“மகிழ்ச்சி புன்னகை மற்றும் அன்புடன் பாடசாலைக்கு” எனும் தொனிப்பொருளில் தேசிய ரீதியில் தரம் 1 மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு தலவாக்கலை லிந்துலை அக்கரகந்த தமிழ் வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக பாடசாலை அதிபர் புனித சேகரம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக வலயக் கல்விப் பணிமனையின் வேண்டுதலுக்கமைய பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் ஆர்.கிருஷ்ணகாந்த் மற்றும் சென். கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபர் ஆர். மாலினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

