உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் இல்லை – நீதி அமைச்சின் அதிரடித் தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படாதவர்களின் தகவல்கள் இருந்தால், அது குறித்து ஆராய்வதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என பலதரப்பட்ட தரப்புகளும் தங்களுடைய கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கு பின்னர், சட்டவரைபு குழுவை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இதனிடையே, நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், வழக்கு விசாரணைகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

47 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

59 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0