உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மாசி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


“மாற்றங்கள் மூலம் இணைவோம்” என்பதே இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினத்தின் கருப்பொருளாகும்.உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர்.


புற்றுநோய் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் இலங்கையில் 35,855 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக 14,986 மரணங்கள் பதிவாகியுள்ளன.
புதிதாக பதிவாகும் புற்றுநோயாளிகளில் சுமார் 19,500 பேர் பெண்களும், 16,400 பேர் ஆண்களும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

59 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0