நீதிமன்ற அழைப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கருத்து.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி., “தற்போதைய அரசு தனது தோல்விகளையும், ஊழல்களையும் மூடிமறைப்பதற்காக எம்மை நீதிமன்றத்துக்கு அழிக்கிறது. இதனால் அரசுக்கு எந்தப் பயனும் கிடையாது” என்று தெரிவித்தார்.இந்தியாவில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு நேற்று இரவு நாடு திரும்பிய அவர், இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை வகித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இந்தியாவில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு நேற்று இரவு நாடு திரும்பிய அவர், இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலை வகித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.நாமல் ராஜபக்ஷ கூறியதாவது, “அரசு மேற்கொண்டுள்ள நிலக்கரி ஊழல் மற்றும் கொழும்பு துறைமுகத்தில் கோளாறான கொள்கலன்கள் சம்பவங்களை மறைக்கவே எம்மை நீதிமன்றம் அழைக்கிறது.
இது மக்களின் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கான முயற்சி மட்டுமே” என்றார்.அவர், தங்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற அழைப்பாணியைப் பற்றியும் பேசியதுடன், “பெலவத்தையிலிருந்து நியமிக்கப்பட்ட பொலிஸ்மா அதிபருக்கு நாட்டின் பொலிஸின் செயல்பாடு தெரியாமலும், தங்காலைக்கும் கொழும்புக்கும் இடையிலான தூரமும் தெரியாமலும், காலை 9.30 மணிக்கு முன்னிலையில் இருக்க சொல்லி, 9.50 மணிக்கு அழைப்பாணையை வழங்குவது நகைப்புக்குரியது” என்றும் தெரிவித்தார்.
மேலும், “ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் வங்கிகளில் மறுக்கப்படுகின்றன. முன்னைய காலங்களில் நாடு திவாலானதாகக் கூறப்பட்டபோதும் இத்தகைய காசோலை மறுக்கப்படவில்லை. இப்போதுதான் உண்மையிலேயே நாடு திவாலாகியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.நாமல் ராஜபக்ஷ, இந்தியாவின் கலிங்கா பல்கலைக்கழகம் வழங்கிய அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், இதைப்பற்றி பொதுமக்கள் தேவையற்ற பதற்றம் அடைய வேண்டியதில்லை என்றும் வலியுறுத்தினார்.