உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இலங்கையின் இயற்கை அழகுடன் கலாசார முறைப்படி திருமணம் – ஐரோப்பிய தம்பதியின் செயல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரையில் வெளிநாட்டு தம்பதியின் திருமணம் நேற்றைய தினம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.ஐரோப்பிய நாடான ஹங்கேரியை சேர்ந்த ஜோனஸ் கோவாஸ் மற்றும் சில்வி தோத் ஆகியோரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இந்த தம்பதி இலங்கையின் இயற்கை அழகு மற்றும் கலாசாரத்தின் மீது கொண்ட அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.இதன் காரணமாக, அவர்கள் இலங்கையின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்யத் தீர்மானித்ததாக தெரிவித்துள்ளனர்.ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியோரின் ஏற்பாட்டில், கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாரம்பரிய நடனக் கலைஞர்களால் தென்னோலைகளால் அழகாக வடிவமைக்கப்பட்ட மேடைக்கு மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். கலாசார முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.பல இன மக்கள் வாழும் கற்பிட்டி தீபகற்பத்தில் இவ்வாறான ஒரு கலாசார நிகழ்வு இடம்பெற்றமை ஒரு அரிய சந்தர்ப்பமாகக் கருதப்படுகிறது.இந்த விசேட திருமண நிகழ்வை அங்கிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு இரசித்தனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

58 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0