உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அர்ச்சுனா எம்.பி வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று(29.01.2026) மல்லாகம் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியில் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு, வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராஜா தனகோபி, சிவரூபன் லகீந்தன் மற்றும் மனோகரன் பிரதீபன் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டன.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, குற்றம் சாட்டப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0