கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம் சகல மாவட்ட மக்களும் ஒன்றுதிரள வேண்டும்! -சுமந்திரன் அழைப்பு.!
அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக, எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்,“கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெற உள்ளது.இந்தப் போராட்டத்தில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, இந்தப் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவையும் வழங்குவதோடு, தொடர்ச்சியான பங்களிப்பையும் வழங்கும்” எனத் தெரிவித்தார்.