உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாந்தை கிழக்கு 50 வீட்டுத்திட்ட வீடுகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் மீள அமைத்து வழங்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 50 வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள 50 வீடுகளும் மிக மோசமாகச் சேதமடைந்து காணப்படுவதால் குடியிருப்பாளர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீள அமைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீள அமைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாந்தை கிழக்கு பிரதேசத்திலுள்ள 50 வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள சகல வீடுகளும் மிக மோசமாகச் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அங்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டுள்ளேன்.

குறித்த 50 வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் பாதிப்படைந்த வீடுகளில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே 50 வீட்டுத்திட்டம் பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட அனைத்து வீடுகளையும் மீண்டும் முன்னுரிமை அடிப்படையில் அமைத்துக் கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் அமைத்துக் கொடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரனால் பதில் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

55 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0