உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

காரைநகரில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தி திறந்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

காரைநகரில் அமைந்துள்ள உள்ளூர் உற்பத்தி நிறுவனமான பல்லுயிர் நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய உலர்த்தியானது இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சூரிய உலர்த்தியானது 50 வீதம் அரச நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. பின்னர் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டு சூரிய உலர்த்தி திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் குறித்த நிறுவனத்தின் உற்பத்தி பகுதிகளையும், உற்பத்தி பொருட்களையும் பார்வையிட்டடனர்.

குறித்த நிறுவனமானது செயற்கை இரசாயனமற்ற இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயிகளின் தானியங்களை கொள்வனவு செய்து அதிலிருந்து பல்வேறு விதமான உற்பத்தி பொருட்களை தயாரித்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வது மாத்திரமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனமானது நஞ்சற்ற உற்பத்திகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மூலப்பொருட்களான இயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட தானியங்களை கொள்வனவு செய்து உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கைலாயப்பிள்ளை சிவகரன், தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் றோஹித்த பிரசாந்த, அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் எந்திரி ரத்நாயக்க, காரைநகர் பிரதேச செயலர் ரஞ்சனா, மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி மௌலீஸ்வரன், கிராம சேவகர், பல்லுயிர் நிறுவனத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0