உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம்; சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

திம்புள்ள பத்தனை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) முற்பகல் 9.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென் கிளயார் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான வேன் கண்டி பகுதியில் இருந்து புதிதாக கொள்வனவு செய்து கொண்டு வரப்பட்ட வாகனம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ நேரத்தில் வாகனத்தை தந்தை செலுத்தியிருந்ததுடன், அவருடன் அவரது மூன்று பிள்ளைகளும் பயணித்துள்ளனர்.

விபத்தில் வாகனத்தில் பயணித்திருந்த ஒரு சிறுவன் காயமடைந்த நிலையில், பிரதேச மக்களின் உதவியுடன் உடனடியாக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு குறிப்பிடத்தக்க காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0