உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்; ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்று (29) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் ஒவ்வொருவரையும் தலா ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது பணி இடைநீக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் மூவரை அடையாள அணிவகுப்பின் போது பாதிரியாளர் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களில் ஒருவரே தன்னைத் தாக்கியவர் எனவும் ஏனைய இரு உத்தியோகத்தர்களும் அந்தத் தருணத்தில் அருகில் நின்றவர்கள் என மதகுரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

54 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

55 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0