உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வரிசை யுகத்தை முடித்த பெருந்தலைவரே ரணில்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட பெருந்தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு எங்கள் ஆதரவு தொடர்ந்து இருக்கும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இலண்டன் பயணம் குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையானார். அவருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், கபீர் ஹாசீம், ஹர்ஷ டி சில்வா உள்ளிட்டோரும், ராஜித சேனாரத்ன, மஹிந்த அமரவீர உட்பட முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.பிக்களும் வருகை தந்திருந்தனர்.

இதன்போதே மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.
“நாட்டில் வரிசை யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர் ரணில். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டபோது அவருடன் இருந்தோம். தற்போதும் நிற்கின்றோம்.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, “நீதிமன்றத்தை நாம் மதிக்கின்றோம். நீதிமன்றம் ஊடாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” – என்று மேலும் சிலர் நம்பிக்கை வெளியிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

52 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

54 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

44 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

61 0 0