உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சிறீதரன் எம்பியை சந்தித்த இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகர்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

கனடா நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டின் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது தமிழர் தாயக பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடுகள், திட்டமிட்ட தமிழர் நில அபகரிப்புக்கள், கிபுல்ஓயா திட்டம் போன்றவற்றின் ஊடாக தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற விடயங்கள் கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு சிறீதரன் எம்பியால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

புதிய உயர்ஸ்தானிகராக வருகை தந்திருந்த இஸபெல்லா மார்ட்டின் மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விடயங்களையும் ஆர்வமாக கேட்டறிந்துகொண்டார்.இந்த சந்திப்பின் போது போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் அடாத்தாக முளைத்துள்ள புதிய விகாரைகள், அரசியல் கைதிகள் தொடர்பான சில விடயங்களை ஆவணங்களுடன் புதிய உயர்ஸ்தானிகருக்கு சிறீதரன் எம்பி தெளிவுபடுத்தியிருந்தார்.சந்திப்பின் போது வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் வகையில் ஒரு நினைவுச்சின்னமும் உயர்ஸ்தானிகர் இஸபெல்லா மார்ட்டினுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

53 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

42 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

60 0 0