தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரின் சேவை நலன் பாராட்டு விழா-விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின்
தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை (28) பாடசாலையின் அதிபராக கடமையாற்றி, தனது சேவையை நிறைவு செய்யும் ஜேசுதாசன் விஜயகுமார் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதிபர் ஜேசுதாசன் விஜயகுமாரை மாலை அணிவித்து இசை வாத்தியத்துடன் வரவேற்றனர்.
பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட சேவை நலன் பாராட்டுக்களுடன், பணி சேவை நிறைவு பெறும் அதிபரின் அகவை 60 சிறப்பு மலர் ‘விஜயாலயம்’ வெளியீடும் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதிபர் ஜேசுதாசன் விஜயகுமாரை மாலை அணிவித்து இசை வாத்தியத்துடன் வரவேற்றனர்.
பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட சேவை நலன் பாராட்டுக்களுடன், பணி சேவை நிறைவு பெறும் அதிபரின் அகவை 60 சிறப்பு மலர் ‘விஜயாலயம்’ வெளியீடும் நடைபெற்றது.நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



