பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் விற்பனை; பதினொரு பேர் கைது..!
பாடசாலைகளில் போதைப் பொருள் பரவலைத் தடுப்பதில் காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறது என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: பாடசாலைகளை குறிவைத்து உணவுப் பொருட்கள் வழியாக போதைப் பொருட்களை விற்பனை செய்யும் முயற்சிகள் கண்டறியப்பட்டு, இதற்காக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப் பொருள் குற்றங்களில் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும், சந்தேகநிலையில் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.