உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்: முச்சக்கர வண்டி சாரதி கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாநகர சபை உறுப்பினர் ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த மாநகர சபை உறுப்பினர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் கெப் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டி சாரதி வீதியை மறித்துள்ளாகவும், அங்கு இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில் மாநகர சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

53 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

42 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

60 0 0